குன்னூர் அருகே மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உள்பட 10 பேர் படுகாயம் : போதிய சாலை வசதி இல்லாததால் தாமதமாக மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால், படுகாயமடைந்தவர்கள் இன்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


நீலகிரி : குன்னூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால், படுகாயமடைந்தவர்கள் இன்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



குன்னூர் அருகே உள்ள சின்னாலக் கம்பை ஆதிவாசி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் பெய்த மழையின் போது, ஏற்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண்ணான தீபா உள்பட பிரியா, கமலா, மல்லிகா, ராணி, வள்ளி, செல்வி, நாகராஜ், தினேஷ், ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சின்னாலக் கம்பை கிராமத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ், போதிய சாலை வசதி இல்லாததால் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவனை ஊழியர்கள் ஸ்டெரச்சர் உதவியுடன் இன்று மதியம் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உரிய சாலை வசதி இல்லாததால், இதுபோன்ற அவசர காலங்களில் ஒருநாள் தாமதமாக மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு சென்றிருப்பது இருளர் இன மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...