கோவை : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மறைவால் காலியாக இருக்கும் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில், முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எஞ்சிய காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரல் 22 வேட்பு மனு தாக்கல் தொடக்கம் (காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை)
• ஏப்ரல் 29 வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்
• ஏப்ரல் 30 வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
• மே 2 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம்
• மே 19ல் வாக்குப் பதிவு
• மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விபரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக, கோவை உதவி ஆணையர் (நகர்ப்புற நிலவரி) ச. பாலகிருஷ்ணன் (7601954524) நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்து அலுவலர்களாக சூலூர் வட்டாட்சியர் ஆ. ஜெயராஜ் (9942819802) மற்றும் சூலூர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ. மீனாகுமாரி (9600439524) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.