கோவை : மேட்டுப்பாளையம் அருகே வனத்துறையினரின் தடையை மீறி ஓடந்துரை வனப்பகுதியில் உள்ள் பெரியசாமி அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துரை வனப்பகுதியில் பெரியசாமி அய்யனார் கோவில் உள்ளது.
அடந்த வனத்திற்குள் உள்ள இக்கோவிலில் ஊமப்பாளையம், மோத்தேபாளையம், கண்டியூர், தாயனூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 34 ஆண்டுகளாக சித்திரை மாதத்தில் பொங்கல் இட்டு படையல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டும் பெரியசாமி அய்யநானரை வழிபட சிறுமுகை வனச்சரக அலுவகத்தில் கிராம மக்கள் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஆனால், தற்போது வனத்தினுள் நீர் பற்றாக்குறையால் இக்கோவிலின் அருகே யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இந்த சூழலில் நள்ளிரவில் 500-க்கும் மேற்பட்டோர் சித்திரை மாத சிறப்பு பூஜைக்காக வனத்துறையின் தடையை மீறி வனப்பகுதிக்குள் செல்ல சென்றனர். இவர்களை வனத்துறையினர் வனச்சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி திரும்பி செல்ல வலியுறுத்தினர்.
இதனால், வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினரின் தடையை மீறி காட்டுக்குள் நுழைந்தனர். பின்னர், கோவிலுக்கு சென்று தங்களது வழக்கமான வழிபாட்டினை நடத்தினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ”யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே அனுமதி மறுக்கபட்டது. வனச்சட்டத்தை மீறி காட்டுக்குள் நுழைந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.
அதே நேரத்தில், ஆண்டு ஆண்டுகாலமாக எங்களின் குலதெய்வ கோவிலில் கிராம மக்கள் செய்து வரும் சித்திரை மாத திருவிழாவினை வனத்துறையினர் தடுத்து நிறுத்தாமல், விழாவிற்கு செல்வோருக்கு உரிய பாதுகாப்பு தர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.