அமெரிக்காவின் வார இதழின் உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியல் வெளியீடு : டாப் 50-க்குள் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம்

கோவை : அமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

கோவை : அமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்றான ஃபார்ட்டுயூன் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தலைசிறந்த தலைவர்களின் டாப் 50 பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 



அதில், கோவையை சேர்ந்த பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45-வது இடத்தை பிடித்துள்ளார். இவர், ஏழை, எளிய பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவான விலையில் நாப்கின்னை தயாரித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இந்த கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு, பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அதுமட்டுமில்லாமல், இவரது வாழ்க்கைக் கதையை இந்தி திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி 'பேட்மேன்' என்கிற பெயரில் திரைப்படத்தை எடுத்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு (Period. End of Sentence.) 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபார்ட்டுயூன் வார இதழின் பட்டியலில் முதல் இடத்துல் வில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்சும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து, ஜெசிண்டா ஆர்டென், ராபர்ட் முல்லர், போனி மா, சத்யா நதெல்லா, கிரெட்ட துங்பெர்க், டிம் குக் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...