சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் பலர் தங்களது டுவிட்டரில் தங்களது அடுத்த வாக்கு ரஜினிக்கே என டுவிட் செய்திருந்தனர். இதனால் டுவிட்டரில் சென்னை டிரெண்டிங்கில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்னும் தேர்தல் களத்தில் இறங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக இருப்பது புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன். சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மே 23-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது தெரிந்து விடும், எனக் கூறினார்.