திருப்பூர் : பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் 95.37 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பேசியதாவது :- பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 24,835 மாணவர்களில் 23,686 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்து இந்தாண்டு முதல்.இடத்திற்கு முன்னேறியுள்ளோம். அதேபோல, தேர்வு எழுதிய 2,697 மாற்றுத்திறனாளிகளில் 2,404 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 45 சிறைவாசிகளில் 34 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை மாவட்ட நிர்வாகம் பின்பற்றும், எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது :- மாநில அளவில் திருப்பூர் கல்வி மாவட்டம் முதலிடம் பெற்று இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஆசிரியர்களின் அயராத முயற்சியால் வெற்றி பெற்றுள்ளோம். மாவட்ட ஆட்சியரை எந்த நேரத்தில் சந்தித்தாலும், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தக்க அறிவுரை வழங்கினார். வரும் கல்வி ஆண்டில் திருப்பூர் கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும், என்றார்.