திருப்பூர் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு : திருப்பூர் ஆட்சியர் தகவல்

திருப்பூர் : திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். 



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பேசியதாவது :- மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் 24 மணிநேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். சி.சி.டி.வி. மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையத்திற்குள் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை காண்பித்தது குறித்து எழுத்துப்பூர்வமான புகார் வரும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெங்கிட்டாபுரம் பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக வந்த தகவலையடுத்து, அதிகாரிகள் உடனடியாக அனுப்பப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக முடிவெடுக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் வாக்களிக்கச் சென்றனர், எனத் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...