கோவை தேர்தல் பணிக்காக வந்த காவலர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை : கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நேற்று முன்தினம் சாலை விபத்தில் சிக்கிய நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை : கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் நேற்று முன்தினம் சாலை விபத்தில் சிக்கிய நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (25) என்பவர் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வந்தார். தேர்தல் பணிக்காக கோவை வந்த அவர், கடந்த 17-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சுங்கம் பைபாஸ் சாலையிலிருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, உக்கடத்தில் இருந்து சுங்கம் நோக்கி வந்த இருசக்கர வாகனம், அவரது வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஸ்ரீனிவாசன் பலத்த காயமடைந்தார். 

பின்னர், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், ஸ்ரீனிவாசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீனிவாசனுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற குனியமுத்தூர் எஸ்.ஐ. குப்புராஜ் என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...