சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களின் பெயர்களை தி.மு.க. தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது


கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களின் பெயர்களை தி.மு.க. தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நேற்று நடைபெற்றது. எஞ்சியுள்ள ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். 

இதில், கோவை சூலூர் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சொத்து பாதுகாப்புக் குழு துணை தலைவர் பொங்கலூர். பழனிசாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்களின் பெயர்களை தி.மு.க. தலைமைக் கழகம் இன்று அறிவித்துள்ளது. இதில், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.வ.வேலு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் த.மோ.அன்பரசு, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மேலும், நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் பெயர்களையும் அறிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...