Breaking: அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராகிறார் டிடிவி தினகரன்

தேர்தல் சின்னம் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.


தேர்தல் சின்னம் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வில் ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அ.ம.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கினார். அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர். அக்கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். எனினும், உச்சநீதிமன்றம் சென்று பரிசுப்பெட்டி சின்னத்தை டிடிவி தினகரன் பொதுச்சின்னமாக பெற்றார்.

இந்த நிலையில், அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார். இன்று நடந்து வரும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...