தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் நேற்று இரவு 9 மணி நிலவர அடிப்படையில், தமிழகத்தில் 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மதுரை தொகுதியில் 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டதாலும், ஆறு மணிக்கு முன்பே வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் பிற தொகுதிகளின் சில வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வாக்களித்து வந்ததாலும் பதிவான வாக்குகளின் விகிதம் அதிகரித்துள்ளது. இரவு 9 மணி மணி வரை 62.01% வாக்குகள் மதுரையில் பதிவாகியுள்ளன.
அதேபோல, இடைத்தேர்தல் நடந்த 18 சட்டமன்றத் தொகுதிகளில் இரவு 9 மணி வரை 71.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக அரூர் தொகுதியில் 86.96% வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87% வாக்குகள் பதிவாகியுள்ளன.