பிளஸ் 2 விடைத்தாள் நகல்களை பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் 22ம் தேதி விண்ணப்பிக்கலாம் : சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந்தேதி தொடக்கம்

கோவை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


கோவை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பெறுவதற்கும், மறுகூட்டலுக்கும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) மதிப்பெண் அனுப்பப்படுகிறது. 

நாளை காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். மேலும், வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெற மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...