12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 97 ஆயிரத்து 992 பள்ளி மாணவ, மாணவிகளும், 47 சிறை கைதிகளும் இந்த தேர்வினை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்படப்பட்டது. மொத்தம் 91.30 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பாடவாரியாக மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்த செல்போன் எண்களுக்கும் SMS மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.