திருப்பூர் மக்களவை தொகுதியில் 72.88 சதவீத வாக்குகள் பதிவு : கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த முறை சரிவு

திருப்பூர் : திருப்பூர் மக்களவை தொகுதியில் 72.88 சதவீத வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து, முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


திருப்பூர் : திருப்பூர் மக்களவை தொகுதியில் 72.88 சதவீத வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து, முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என்ற இரு தொகுதிகளுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர், கோபி பெருந்துறை என நான்கு சட்டமன்ற தொகுதிகளும் இணைந்து திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 62 ஆயிரத்து 935 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 66 ஆயிரத்து 765 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 136 பேர் என மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 29 ஆயிரத்து 236 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 1,704 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. இதில், 885 வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலத்திலிருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற சாவடிகளில் முழுமையாக வீடியோ பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 

அவற்றில் 375 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு, அவற்றிற்கு மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியை பொருத்தவரையிலும், 6 கம்பெனியை சேர்ந்த 741 துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை முதல் நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவில், 72.88 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதனையடுத்து, அந்தந்த வாக்குசாவடியில் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டை காட்டிலும் சரிவு :

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 72.88 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 76.22 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு 3.34 சதவிகித வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...