நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி தோராயமாக 67.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து முழுமையான விவரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது," என்றார்.