தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 69.55 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் வாக்கு சதவீத விபரங்களை இன்று மாலை சென்னையில் வெளியிட்டார். அவர் கூறியதாவது :- தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.05 சதவீத வாக்குகளும் பதிவாகின. சித்திரை திருவிழாவையொட்டி, இரவு 8 மணி வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ள மதுரை தொகுதியில், மாலை 6 மணி வரை 60.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதேபோல, 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அரூரில் 89.96 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூரில் 60.87 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தலின் போது எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. எந்த தொகுதிக்கும் மறுதேர்தல் நடத்தப்பட தேவையில்லை, என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...