திருப்பூர் : விலைவாசி உயர்வற்ற 5 ஆண்டுகால ஆட்சிக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளதாக திருப்பூர் மக்களவை தொகுதியில் வாக்களித்த பிறகு கோவை பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் அரண்மனைபுதூர் வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பிரதமர் மோடியின் விலைவாசி உயர்வற்ற 5 ஆண்டுகால ஆட்சிக்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழைகளின் காவலனாய் போற்றப்படுபவராக மோடி உயர்ந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழகத்திலும் 39 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மிகப்பெரிய வெற்றி பெறும். அடுத்த அரசு மத்தியிலே அமையும் போது தமிழர்களின் சொல்லுக்கு டெல்லி செவிசாய்க்கின்ற வெற்றியாக இது அமையும், எனக் கூறினார்.

முன்னதாக, சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களிக்க வந்த போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர் தனது பணியை விட்டு விட்டு சி.பி. ராதாகிருஷ்ணனுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அவரே மை வைத்து வாக்களிக்க அனுப்பினார்.