வாக்குப்பதிவின் போது இரட்டை இலை சின்னத்தை காட்டியதால் சர்ச்சை : திருப்பூரில் அரசியல் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு

திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலையை குறிக்கும் வகையில், இரு விரல்களை உயர்த்தி காட்டியதால், ஆளும் கட்சியினர் மற்றும் பிற கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலையை குறிக்கும் வகையில், இரு விரல்களை உயர்த்தி காட்டியதால், ஆளும் கட்சியினர் மற்றும் பிற கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

திருப்பூர் முருங்கப்பாளையத்தில் உள்ள தெற்கு பகுதி 1-ம் எண் வாக்குச்சாவடி மையத்தில் திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, இரட்டை இலையைக் குறிக்கும் வகையில் இருவிரல்களை உயர்த்தி காண்பித்தார். அப்போது, அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள், அவ்வாறு காண்பிக்கக் கூடாது என எச்சரித்தனர். இந்த நிலையில், வாக்குச்சாவடி மையத்தில் அமர்ந்திருந்த மற்ற கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள், அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுபோன்ற விளம்பர செயல்களை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



மேலும், வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுடன் வந்தவர்களை வெளியேறச் சொல்லி, மற்ற கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் அ.தி.மு.க.வினரை முற்றுகையிட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...