கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மதுரையை தவிர்த்து மற்ற 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் தற்போதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதேவேளையில், பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முத்திரையிடப்பட்டு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீல் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட இருக்கிறது. வரும் மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, வேட்பாளரின் வெற்றி அறிவிக்கப்படும்.