தமிழகத்தில் நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், மாலை 6 மணியுடன் தமிழகத்தில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.