திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் தொகுதியின் சி.பி.ஐ. வேட்பாளர் சுப்பராயன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திர குமார் மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வாக்குகளை பதிவு செய்தனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல, படுகர் இன மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற தொகுதியானது கூடலூர், உதகை, மேட்டுப்பாளையம், பவானி சாகர் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அ.தி.மு.க. சார்பில் தியாகராஜனும், தி.மு.க. சார்பில் ஆ. ராசாவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரனும், அ.ம.மு.க. சார்பில் ராமசாமியும் போட்டியிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படுகர் இன மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி (தனி) தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2009-ம் ஆண்டு முதல் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்ட நீலகிரி தொகுதியில், கடந்த 2014-ம் ஆண்டு 74.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவான சதவீதங்கள் பின்வருமாறு, பல்லடத்தில் 64 சதவீத வாக்குகளும், சூலூரில் 67.10 சதவீத வாக்குகளும், கவுண்டம்பாளையத்தில் 56.50 சதவீத வாக்குகளும், கோவை தெற்கில் 52.26 சதவீத வாக்குகளும், கோவை வடக்கில் 51.55 சதவீத வாக்குகளும், சிங்காநல்லூரில் 51.46 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.