நீலகிரி : கூடலூரை அடுத்த கண்ணம்வயல் வாக்குச்சாவடிக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் அதிரடிப்படையினர் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் இந்திய ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்போடு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி தமிழக-கேரள எல்லையில் அமைந்திருப்பதால், இப்பகுதியில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மேலும், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரம்பாடி பகுதியில் உள்ள கண்ணம்வயல் வாக்குச்சாவடி தனியார் தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ளது. அதேநேரம், அந்த வாக்குச்சாவடி கேரள வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இந்த நிலையில், கண்ணம்வயல் வாக்குச்சாவடிக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் அதிரடிப்படையினர் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் இந்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புடன் காலை முதல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.