சர்கார் படபாணியில் இளைஞரின் ஓட்டை வேறொருவர் போட்டுவிட்ட சம்பவம் : கோவை இளைஞர் ஏமாற்றம்

கோவை : கோவை போத்தனூர் அருகே பட்டதாரி இளைஞரின் ஓட்டு, ஏற்கனவே போடப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியதால், ஆர்வத்துடன் வந்த அந்த இளைஞர் அதிருப்தியடைந்தார்.


கோவை : கோவை போத்தனூர் அருகே பட்டதாரி இளைஞரின் ஓட்டு, ஏற்கனவே போடப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியதால், ஆர்வத்துடன் வந்த அந்த இளைஞர் அதிருப்தியடைந்தார். 

கோவை போத்தனூர் எஸ்.என்.டி. பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கிருஷ்ணராஜ். பட்டதாரியான இவர் வேலை தேடி வருகிறார். தேர்தல் நாளான இன்று சித்தனாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்கு அளிக்க காலை 11 மணியளவில் சென்றார். அப்போது, அவரது ஓட்டு ஏற்கனவே காலை 8 மணிக்கு போடப்பட்டு விட்டதாக வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர். 



இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கிருஷ்ணராஜ், இது குறித்து தேர்தல் அலுவலரிடம் முறையிட்டு உள்ளார். மேலும், இதுவரை தான் வாக்களிப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல், தன்னை காக்க வைத்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இதேபோல, பீளமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது வாக்கை அளிக்க சென்றபோது, அவரது வாக்கும் ஏற்கனவே போடபட்டு விட்டதாக வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறியதால் ஏமாற்றமடைந்தார். 



அண்மையில், சர்கார் படத்தில் நடிகர் விஜயின் ஓட்டை வேறு ஒருவர் போட்டு விட்டதாக கூறிய காட்சிகளைப் போன்று, கோவையில் தற்போது அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...