வாக்குப்பதிவு இயந்திரத்தில் அ.ம.மு.க.விற்கு பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம்

கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்கு இயந்திரத்தில் அ.ம.மு.க. வேட்பாளரின் பெயருக்கான பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.


கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்கு இயந்திரத்தில் அ.ம.மு.க. வேட்பாளரின் பெயருக்கான பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலூரை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் காசி. தங்கவேல் பெயருக்கு நேரான பட்டன் இல்லை. இதனால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் மாற்று இயந்திரம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கடலூர்  கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அ.ம.மு.க. வேட்பாளர் காசி. தங்கவேல் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...