கோவையில் வாக்களிக்கச் சென்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழப்பு

கோவை : கோவை காந்தி மாநகர் பகுதியின் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



கோவை : கோவை காந்தி மாநகர் பகுதியின் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

காந்தி மாநகர் வின்சென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது மகனுடன் பாலகிருஷ்ணன் (81) என்ற முதியவர் வாக்கு அளிக்கச் சென்றிருந்தார். அப்போது, வாக்களிப்பதற்காக காத்திருந்த அவர், திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். 

அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், உயிரிழந்த முதியவர் காந்தி மாநகர் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்ததும், இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...