கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 1 மணி நிலவரப்படி, 36.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளில் 975 மையங்களில் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 லட்சத்து 38 ஆயிரத்து 442 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 66 ஆயிரத்து 331 பெண் வாக்காளர்களும், 341 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 29 லட்சத்து 05 ஆயிரத்து 114 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளனர்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக சக்கர நாற்காலிகளும் வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 1 மணி நிலவரப்படி, 36.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.