நீலகிரி : நீலகிரி (தனி) தொகுதியில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக மண்ணின் மைந்தர்களான படுகர் இனமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நீலகிரி : நீலகிரி (தனி) தொகுதியில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக மண்ணின் மைந்தர்களான படுகர் இனமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
படுகர் இன மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற தொகுதியானது கூடலூர், உதகை, மேட்டுப்பாளையம், பவானி சாகர் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அ.தி.மு.க. சார்பில் தியாகராஜனும், தி.மு.க. சார்பில் ஆ. ராசாவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரனும், அ.ம.மு.க. சார்பில் ராமசாமியும் போட்டியிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படுகர் இன மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி(தனி) தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2009-ம் ஆண்டு முதல் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்ட நீலகிரி தொகுதியில், கடந்த 2014-ம் ஆண்டு 74.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.