கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான தங்களது வாக்குகளை அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதிவு செய்தனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான தங்களது வாக்குகளை அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதிவு செய்தனர்.
17-வது நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாவது கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது கோவையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி. ஆறுகுட்டி, விளாங்குறிச்சியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தனது வாளினை செலுத்தினார்.

இதேபோல, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், செல்வபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்கினை குடும்பத்துடன் வந்து செலுத்தினார்.