கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக கடமையை ஆற்றிய ஆதரவற்ற முதியவர்கள்

கோவை : ஈரநெஞ்சம் காப்பகத்தில் வசித்து வரும் 59 ஆதரவற்ற முதியவர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்.


கோவை : ஈரநெஞ்சம் காப்பகத்தில் வசித்து வரும் 59 ஆதரவற்ற முதியவர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் 60 வயது முதல் 90 வயது வரையிலான 5 ஆண்கள் மற்றும் 54 பெண்கள் என மொத்தம் 59 முதியவர்கள் வசித்து வருகின்றனர்.

பல்வேறு காரணங்களால் தனிமைப்படுத்தப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வரும் இவர்கள், இந்த மக்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்களித்தனர். 



அறக்கட்டளையை சேர்ந்த மகேந்திரனின் முயற்சியால் வாக்களிப்பது என்றால் என்னவென்றே தெரியாத பலரும், பல ஆண்டுகளாக வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தவர்களும் இன்று ஆர்.எஸ். புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.



அதேபோல, நடக்கமுடியாத முதியவர்கள் தள்ளுவண்டிகள் மூலமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். தனது பிள்ளைகளால் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வரும் இந்த முதியவர்கள், தற்போது தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியதால் வெளிப்பட்ட மகிழ்ச்சி காண்போரின் நெஞ்சை கவர்ந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...