விவிபேட் எனப்படும் வாக்கை உறுதிப்படுத்தும் இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும் முழுமையாக எண்ண வேண்டும் என கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

கோவை வரதராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். விவிபேட் எனப்படும் வாக்கை உறுதிப்படுத்தும் இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும் முழுமையாக எண்ண வேண்டும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பெரும்பாலான மக்கள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு வருவது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதனால், ஜனநாயகம் காக்கப்படும். தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால், தங்களது சின்னம் தெளிவாக தெரியவில்லை என புகார் அளித்த பின்னும், தற்போதும் அதேநிலை நீடிக்கிறது. வாக்கு சீட்டுகள் மற்றும் பூத் ஸ்லிப்புகள் முறையாக விநியோகிக்கப்படவில்லை. சில இடங்களில் அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பல இடங்களில் அதிகாரிகளுக்கு வேட்பாளர்கள் தரப்பிலிருந்து தகவல் அளிக்க வேண்டிய நிலை இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.