கோவை : பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வேரோடு சாய்க்க கூடிய தேர்தலாக இது இருக்கும் என கோவையில் வாக்களித்த பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தெரிவித்தார்.
கோவை : பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வேரோடு சாய்க்க கூடிய தேர்தலாக இது இருக்கும் என கோவையில் வாக்களித்த பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது :- மத்தியில் கடந்த ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.க., மக்கள் விரோத செயல்களை செயல்படுத்தியது. பணமதிப்பிழப்பு செய்து பணத்திற்காக மக்களை வீதி வீதியாக அலைய வைத்த பா.ஜ.க அரசிற்கு பாடம் புகட்டும் வகையில், இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும். கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எடுபுடியாக செயல்படும் தமிழக அரசை உடனடியாக துரத்தி அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.
கோவையில் ஜி.எஸ்.டி. காரணமாக தொழில்கள் பாதிக்கப்படும் வகையில், இரண்டு அரசுகளும் செயல்பட்டு உள்ளது. மக்கள் பெரும் பெருந்திரளாக வந்து வாக்களித்த வருகின்றனர். பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வேரோடு சாய்க்க கூடிய தேர்தலாக இது இருக்கும். 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, மாநில அரசை வீழ்த்துகின்ற தேர்தலாக இது இருக்கும், என தெரிவித்தார்.