கோவை : பொள்ளாச்சியில் பேருந்துகள் தாமதமாக இயங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : பொள்ளாச்சியில் பேருந்துகள் தாமதமாக இயங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சியில் இருந்து சொந்த ஊரான வால்பாறைக்கு சென்று வாக்களிப்பதற்காஅ ஏராளமான மக்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்து இருந்தனர். ஆனால், பேருந்து உரிய நேரத்திற்கு வராமல் மிகவும் தாமதமாக வந்தன. இதனால், உரிய நேரத்தில் சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 4 மணி நேரமாக காத்திருந்த பயணிகள், பேருந்துகள் தாமதமாக இயங்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.