திருப்பூர் : திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், அதிகாலை முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்.
திருப்பூர் : திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், அதிகாலை முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்.
17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருப்பூர் தொகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிகாலை 7 முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூரில் 161 எண் கொண்ட வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து வாக்களர்களும் வாக்களிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.