கோவை : குனியமுத்தூர் அருகே வீட்டிற்கு பால் வாங்கச் சென்ற பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : குனியமுத்தூர் அருகே வீட்டிற்கு பால் வாங்கச் சென்ற பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் சந்தோஷ். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். மேலும், இவர் பகுதி நேரமாக தேனீர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் பணி முடிந்து வந்து கொண்டிருந்தபோது, தனது வீட்டிற்காக பால் வாங்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கம் அடைந்த மாணவர் பேச்சு மூச்சற்ற நிலையில், சாலையில் விழுந்து கிடந்தார்.
இதையடுத்து, மாணவனை பரிசோதித்தவர்கள் மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் தேர்தல் பரபரப்பினால் மாணவனின் உடலை உடனடியாக பெற்றுச் செல்லும்படி மாணவனின் உறவினர்களுக்கு அறிவுறுத்தினர். பின்னர், பேச்சுவார்த்தைக்கு பின் மாணவனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.