கோவை : கோவையில் வசித்து வரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இரவில் பணி முடிந்து வாக்களிக்க தங்களது சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை : கோவையில் வசித்து வரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இரவில் பணி முடிந்து வாக்களிக்க தங்களது சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நகரமாக உள்ளது. இந்த மாநகரில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தேர்தல் நடைபெறும் காலங்களில் வாக்குப்பதிவு செய்ய அவரவர் தம் சொந்த ஊர்களுக்கு செல்ல ம்வது வழக்கம். அப்படி தேர்தல் நேரங்களில் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஓட்டு போடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பணி முடிந்து, இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அப்போது, தென் மாவட்டமான மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிக்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.
100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றோ அல்லது இருக்கும் ஊர்களில் வாக்களிக்கவோ போதிய வசதிகளை செய்யவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.