கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

கோவை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கோவையிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


கோவை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கோவையிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 



தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்களின் வசதிக்காக, குடிநீர், பந்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக சக்கர நாற்காலிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளில் 975 மையங்களில் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 லட்சத்து 38 ஆயிரத்து 442 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 66 ஆயிரத்து 331 பெண் வாக்காளர்களும், 341 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 29 லட்சத்து 05 ஆயிரத்து 114 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...