கோவையில் விதிகளை மீறி வாக்குசேகரிக்க சென்ற சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவை : மலுமிச்சம்பட்டி அருகே அ.தி.மு.க.வின் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிக்க சென்றதாக எழுந்த புகாரையடுத்து, பொதுமக்கள் இத்தனை நாட்கள் இல்லாமல் எதற்காக எங்களைப் பார்க்க வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : மலுமிச்சம்பட்டி அருகே அ.தி.மு.க.வின் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிக்க சென்றதாக எழுந்த புகாரையடுத்து, பொதுமக்கள் இத்தனை நாட்கள் இல்லாமல் எதற்காக எங்களைப் பார்க்க வந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பொதுமக்களை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அன்பு நகருக்கு அரசின் உத்தரவுப்படி இடம் மாற்றப்பட்டனர். இதனையடுத்து, மலுமிச்சம்பட்டி பகுதிக்கு இடமாற்றப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மலுமிச்சம்பட்டி பகுதியில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பொதுமக்களிடம் வாக்களிக்க வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு, இவ்வளவு நாள் எங்கே போனீர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் நாங்கள் சிரமப்படுவதாகவும், ஓட்டுப்போட மட்டும் நாங்கள் வேண்டுமா..? என கேள்வி எழுப்பினர். அதேபோல, பொதுமக்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளீர்களா..? எனவும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அவர் தாமரைக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.



தேர்தல் பிரச்சார நேற்று மாலை 6 மணியுடன் முடிந்த நிலையில், தேர்தல் விதிமீறி ஒவ்வொரு பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...