கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 22 மாநிலங்களுக்கு 2-ம் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. இந்த நிலையில், சட்டம் ஒழுங்கை பாதிகாக்கும் விதமாகவும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மே 1-ம் தேதி வரை கூட்டம் கூடுதல், சுவரில் எழுதுதல், போஸ்டர் ஒட்டுதல் மற்றும் ப்ளக்ஸ் போர்டு வைத்தல், துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன் அனுமதி பெற்று ஊர்வலம் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.