கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவுள்ள இடத்தை கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கு. ராசாமணி நேரில் பார்வையிட்டார்.
கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவுள்ள இடத்தை கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கு. ராசாமணி நேரில் பார்வையிட்டார்.

17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்படாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு நடைபெறும் பூத்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. நாளை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் என சொல்லப்படும் வி.வி.பேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரி பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகர் காவல்துறை ஆணையர், தேர்தல் பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறைக்குள் யாரும் புக முடியாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, 24 மணிநேரமும் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.