ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்

கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு பணியாளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு பணியாளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம். 

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்கள் அனைத்திலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் சீட்டுகள் (பூத் ஸ்லிப்) வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, வாக்காளர் சீட்டுகள் (பூத் ஸ்லிப்) பெறாதவர்கள், வாக்குப்பதிவு மையத்தின் வளாகத்தில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். 

வாக்காளர் சீட்டுக்கள் வாக்காளர்களுக்கு தகவலுக்காகவும், வாக்குப்பதிவு மையங்கள் அமைவிடம் குறித்தான வழிகாட்டுதலுக்காகவும் மட்டுமே ஆகும். வாக்காளர் சீட்டுகள் மட்டும் வைத்து வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது. ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். அவ்வாறு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை காண்பிக்க இயலாதவர்கள் கீழ்க்கண்ட 11 மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். 

1. கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்)

2. ஓட்டுநர் உரிமம்

3. மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

4. வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக அட்டை

5. நிரந்தர கணக்கு எண் அட்டை

6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

7. வேலை உறுதி திட்டப் பணி அட்டை

8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. எம்.பி., எம்.எல்.ஏ., சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை

11. ஆதார் அட்டை ஆகிய 11 வகையான புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களைக்காட்டி வாக்களிக்கலாம். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...