உக்கடம் பைபாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கிய காவலர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கோவை : உக்கடம் பைபாஸ் அருகே எதிரே வந்த வாகனம் உரசியதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை : உக்கடம் பைபாஸ் அருகே எதிரே வந்த வாகனம் உரசியதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட குனியமுத்தூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குப்புராஜ் (38). இவருடன் இன்று தேர்தல் பணிக்காக சீனிவாசன் என்ற காவலரும் இருசக்கர வாகனத்தில் உக்கடம் பைபாஸ் பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த உதவி ஆய்வாளர் குப்புராஜ் வளைவில் வளைக்கும் போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் ஓரத்தில் உரசியதில் கீழே விழுந்தனர். 



இதையடுத்து, தகவல் தெரிந்த அருகே வந்த தனியார் வாகனத்தினர் குப்புராஜை கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சீனிவாசனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது, சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...