திருப்பூர் : நடப்பாண்டில் பின்னலாடை ஏற்றுமதி ரூ. 30,000 கோடி இலக்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நிர்ணயம் செய்துள்ளது.
திருப்பூர் : நடப்பாண்டில் பின்னலாடை ஏற்றுமதி ரூ. 30,000 கோடி இலக்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நிர்ணயம் செய்துள்ளது.
கடந்த 2017-18-ம் ஆண்டில் அனைத்து இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மூலம் ரூ. 1,07,679 கோடி வருமானம் ஈட்டப்பட்டது. ஆனால், இதற்கு அடுத்த ஆண்டு 2018-19-ல் 4.7 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,12,715 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் மூலம் ரூ. 26,000 கோடி வர்த்தகமானது. இது கடந்த ஆண்டான 2017-18-ல் 24,000 கோடியாக இருந்தது. தற்போது 8.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்த பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதற்காக, விடா முயற்சியாக பணியாற்றிய திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டுக்கள். மேலும், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல். (RoSCTL) ரேட் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களே ஆகும். 2019-20-ம் ஆண்டின் பின்னலாடை ஏற்றுமதியை ரூ. 30,000 கோடி இலக்காக நிர்ணயித்துள்ளோம், எனத் தெரிவித்துள்ளார்.