கோவையில் அரசு மருத்துவரின் தனியார் மருத்துவமனையில் தாய், சேய் உயிரிழப்பு : மருத்துவர் மீது நடவடிக்கைக் கோரி மறியல்

கோவை : கோவையில் அரசு மருத்துவரின் தனியார் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின் போது, தாயும், சேயும் உயிரிழந்த நிலையில், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை : கோவையில் அரசு மருத்துவரின் தனியார் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின் போது, தாயும், சேயும் உயிரிழந்த நிலையில், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் திலகவதி. இவர் தனியாக தனியார் மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையில், இன்று கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவரையும் மருத்துவர் திலகவதி அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அப்போது, மருத்துவரின் அலட்சியத்தால், எதிர்பாராதவிதமாக தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். 



இதையடுத்து, இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்து அங்கு குவிந்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மருத்துவர் திலகவதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கிடங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...