நீலகிரியில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் மிகுந்த வாக்குச்சாவடிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள வாக்குசாவடிகளுக்கு வனத்துறையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள வாக்குசாவடிகளுக்கு வனத்துறையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 



இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கூடலூரில் உள்ள வாக்குச்சாவடிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அதற்கு 5 பேர் கொண்ட வனக்குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகளிலிருந்து வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பளிக்க 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



பொதுவாக, கூடலூர் பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் இருப்பதாலும், வனங்கள் நிறைந்து காணப்படுவதாலும் வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருப்பது வழக்கம். எனவே, வனத்துறையினர் இவற்றின் நடமாட்டம் வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகிலோ அல்லது வாக்களிக்க வரும் கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக இருந்து விடக்கூடாது என்பதால், வனத்துறையினர் 24 மணிநேர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டுள்ளனர். ஆகவே, பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...