நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகைக்கு சமவெளி பிரதேசங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், இங்குள்ள இதமான காலநிலை அனுபவித்துச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக சமவெளி பிரதேசங்கள் போல் உதகை நகரிலும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், கோடை சீசனின் போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அதேவேளையில், மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விளை நிலங்களுக்கு போதிய தண்ணீர் இன்றியும் விவசாயிகள் கவலையடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், பிற்பகல் முதல் உதகை நகரம், பிங்கர் போஸ்ட், நஞ்சநாடு, இத்தலார், எமரால்டு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் கோடை சீசனில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீராக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் கூட இல்லாத நிலையில், உதகையில் கோடை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.