கோவை தொகுதியில் 16 சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு : மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

கோவை : கோவை மாவட்டத்தில் தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கு.ராசாமணி தெரிவித்தார்.


கோவை : கோவை மாவட்டத்தில் தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கு.ராசாமணி தெரிவித்தார்.

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட், மை, எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் துணை இராணுவ படையினர் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார். 

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேட்டியளித்ததாவது :- கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 470 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டுள்ளது. 1,880 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் அலுவலர்கள், வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்று மாலைக்குள் இந்த பணிகள் நிறைவடையும். மாற்று திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாற்று திறனாளிகளுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க டோக்கன் வசதி செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்ய 20 சதவீத கூடுதல் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் இருக்கின்றனர். 

தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் தமிழகம் - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, என அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...