கோவை : வரும் 25-ம் தேதி முதல் நாள்தோறும் அதிகாலையில் சென்னை - கோவை இடையே பரஸ்பர விமான சேவையை அலையன்ஸ் ஏர் அறிமுகம் செய்துள்ளது.
கோவை : வரும் 25-ம் தேதி முதல் நாள்தோறும் அதிகாலையில் சென்னை - கோவை இடையே பரஸ்பர விமான சேவையை அலையன்ஸ் ஏர் அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம், சென்னை - கோவைக்கு நேரடியாக 3-வது விமான சேவை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை வரும் 25-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிகாலை 05.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 07.15 மணிக்கு கோவை வந்தடைகிறது. பின்னர், காலை 07.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
இதேபோல, நாள்தோறும் இரவு 07.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த விமானம், இரவு 09.15 மணிக்கு கோவை வந்தடைகிறது. பின்னர், இரவு 09.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 11 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
"இதுபோன்ற ஏ.டி.ஆர் ரக விமானங்கள் சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, போர்ட்பிளேயர், மதுரை, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும் மக்களும் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. சென்னையில் இருந்து வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் காலையில் இந்த விமானம் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றுவிட்டு, அன்றைய தினமே அவர்களது பணிகளை முடித்துவிட்டு, மாலை நேர விமானங்களில் திரும்பி வருகின்றனர். எங்களது அலையன்ஸ் ஏர் சேவைக்கு ஆதரவு அளித்து, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகளை வழங்க ஒத்துழைக்க வேண்டும்," என்கிறார் ஏர் இந்தியாவின் நிலைய மேலாளர் கிரிஜா ரமேஷ்.