திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாக்குச்சாவடிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பேசியதாவது :- வாக்கு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனுப்பப்படுவதோடு, அலுவலர்களுக்கான பணி ஆணைகளும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர், எனத் தெரிவித்தார்.