பிளாக் தண்டர் மற்றும் தண்டர் வோல்டுக்கு நான்கு தேசிய விருது

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பிளாக் தண்டர் தீம் பார்க் மற்றும் தண்டர் வோல்டுக்கு நான்கு தேசிய விருது வழங்கப்பட்டது.


கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பிளாக் தண்டர் தீம் பார்க் மற்றும் தண்டர் வோல்டுக்கு நான்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

பிளாக் தண்டர் தீம் பார்க்கிற்கு 2018-2019 ஆண்டிற்கான சிறந்த தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதுனை மும்பை எக்ஜ்பிசன் சென்டரில் நடைபெற்ற விழாவில், பிளாக் தண்டரின் செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கல்ராஜ் பெற்றுக்கொண்டார். இந்த விருதானது அவருடைய உயர்ந்த நோக்கத்தையும், கடின உழைப்பையும் தொழில் அனுபவத்தையும் வைத்து பிளாக் தண்டர் தீம் பார்க் ஒரு தனித்தன்மையைக் கொண்டு செயல்படுத்துவதற்காக வழங்கப்பட்டது. பிளாக் தண்டரில் விளையாடுபவர்களுக்கு பொழுது போக்குக்காக மட்டும் அல்லாமல், மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. ஏனெனில், இங்கு வாட்டர் ரைடு, மைண்ட் புளொயிங் டிரை ரைடு, படகு சவாரி, லீசர் ஹோட்டல் மற்றும் பல இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டுகளில் பிளாக் தண்டர் நிறுவனமானது பல்வேறு விருதுகளை ஐ.ஏ.ஏ.பி.ஐ. என்ற அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது. 

விருது பெற்றது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் வின்சென்ட் அடைக்கலராஜ் கூறியதாவது:- இதுபோன்ற வாட்டர் தீம் பார்க்கில் புதிது புதிதான மெய்சிலிர்க்க வைக்கும் விளையாட்டுகளை உருவாக்குவதாலும், புதுப்புது வித்தியாசமான விளம்பரங்கள் மூலமாகவும் மட்டுமே அம்யூஸ்மென்ட் இன்டஸ்ட்ரீஸ் மென்மேலும் உருவெடுக்கும். பிளாக் தண்டர் மற்றும் தண்டர் வோல்டு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று தேவைகளை நிறைவேற்றுவதால், வாடிக்கையாளர்கள் செல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்கின்றனர், என்கிறார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...