நீலகிரி : நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் 120 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி : நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் 120 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், ஈரோட்டில் உள்ள பவானி சாகர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், 6 லட்சத்து 65 ஆயிரத்து 337 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 202 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக நீலகிரி தொகுதியில் மொத்தம் 1,610 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 736 வாக்குச்சாவடிகள் நகரப்பகுதிகளிலும், 874 வாக்குச்சாவடிகள் ஊரக பகுதிகளிலும் உள்ளன. இதில்120 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறிப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 78 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு நுண் பார்வையாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார். 656 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 7,786 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள், அதிரடிப் படையினர், என்.எஸ்.டி என்றழைக்கப்படும் நக்சல் தேடுதல் படைப் பிரிவினர் என பல பிரிவினச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.